புதினங்களின் சங்கமம்

குண்டுடன் நடமாடுவதாக தேடப்பட்ட லொறி கைப்பற்றப்பட்டது (Photos)

வத்தளை, நாயகந்த பகுதியில் வைத்து தேடப்பட்டு வந்த WP DAE 4197 என்ற இலக்க தகடு கொண்ட லொறி கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

வெல்லம்பிட்டி, நவகம்புர பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த லொறி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

லொறியில் வெடி பொருட்கள் இருந்ததா என விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஷங்கிரி-லா ஹோட்டல் மீது தற்கொலை குண்டு தாக்கிய நபரின் பெயரிலேயே குறித்த லொறி பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.