புதினங்களின் சங்கமம்

அநாமதேய பொதியால் யாழ் நீதிமன்றில் பதற்றம்!!

யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்துக்குள் கைவிடப்பட்ட நிலையில் இருந்த பை ஒன்றால் பதற்றம் ஏற்பட்டது. எனினும் அந்தப் பை நீதிமன்றில் வழக்குக்காக வந்த ஒருவரினுடையது என விசாரணையில் தெரிய வர பதற்றம் தணிந்தது.

யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்தின் முன்பக்க வாயிலில் உள்புறமாக நீல நிற புத்தகப் பை காணப்பட்டது. அதனால் நீதிமன்றில் நின்றோர் குழப்பமடைந்ததால் பதற்றம் ஏற்பட்டது.

அந்தப் பையை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அங்கிருந்து அப்புறப்படுத்தினார். அதன்போது நீதிமன்றுக்கு வழக்குக்கு வருகை தந்திருந்தவர் தன்னுடையது என ஓடிவந்தார்.

அதனால் அந்த நபர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பை வழங்கப்பட்டது. பையும் சோதனையிடப்பட்டது.

இதனால் நீதிமன்றில் சுமார் 30 நிமிடங்கள் பதற்றநிலை நீடித்தது. ஏற்கனவே பூகொட நீதிவான் நீதிமன்ற வளாகத்துக்கு முன் இன்று காலை குண்டு ஒன்று வெடித்ததால் நாடுமுழுவதும் நீதிமன்றங்களில் குழப்பநிலை உள்ளது.

இதனால் வவுனியா நீதிமன்ற ஊழியர்களை நேரத்துடன் வீடு செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.