திருகோணமலையில் பரபரப்பு!! இரு இளைஞர்களைக் காதலித்த யுவதி!! ஒரு இளைஞன் வெட்டிக் கொலை!!
திருகோணமலையில் இளைஞர் ஒருவர் வாளால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை துறைமுக பொலிஸ் பிரிவின் கடற்படை முகாமிற்கு அருகிலேயே குறித்த இளைஞர்
கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
திருகோணமலை நீதிமன்ற வீதி, வில்லூன்றி பகுதியை சேர்ந்த தங்கத்துரை தனுஸ்டன் (21) என்ற
இளைஞனே கொல்லப்பட்டுள்ளார்.
யுவதி ஒருவரை இரு இளைஞர்கள் காதலித்து வந்துள்ளனர். இதனால், இரு
இளைஞர்களிற்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டிருந்தது.
சித்திரை புதுவருட தினத்திலன்றும் இரண்டு இளைஞர்களிற்குமிடையில் முறுகல்
ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில், இன்று, கொல்லப்பட்ட இளைஞன், தனது நண்பருடன் மோட்டார்
சைக்கிளின் பின்னால் இருந்து சென்று கொண்டிருந்தார்.
இந்த சமயத்தில் இன்னொரு மோட்டார் சைக்கிளில் பின்பறமாக வந்த ஒரு இளைஞன், தனுஸ்டனின் கழுத்தில் ஓங்கி வெட்டினார். தனுஸ்டன் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டார்.
வாளால் வெட்டிய இளைஞன் தலைமறைவான நிலையில், தற்போது பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த இளைஞனின் சடலம் தற்போது திருகோணமலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.