யாழில் சாராயம் குடித்து வாள் வெட்டில் ஈடுபட்ட மாணவர்கள்!! சாவகச்சேரி வைத்தியசாலையில் பயங்கரம்
மதுபானம் அருந்திய போது ஏற்பட்ட கைகலப்பில் பாடசாலை மாணவர் ஒருவர் வெட்டுக் காயத்துகு
இலக்காகி சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு வைத்தியசாலையில்
சிகிச்சை வழங்கப்பட்ட போது அங்கு வந்த கும்பல் ஒன்று மாணவருடன் வைத்தியசாலைக்குச்
சென்றவர்களை தாக்க முற்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.
வரணி இயற்றாளையில் இன்று மாலை 5.30 மணியளவில் மாணவன் தாக்கப்பட்டார். வைத்தியசாலைக்குள்
இன்றிரவு 7 மணியளவில் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது.
சம்பவத்தில் மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியில் கல்வி பயிலும் நந்தகுமார் பாருகன்
(வயது-19) என்ற மாணவனே வெட்டுக்காயத்துக்குள்ளாகிய நிலையில் சாவகச்சேரி
வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
நண்பர்கள் கூடி மது அருந்தியுள்ளனர். அதன்போது அவர்களுக்குள் முரண்பாடு ஏற்பட்டு
கைகலப்பாக மாறியதில் ஒருவர் தாக்கப்பட்டார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
சாவகச்சேரி வைத்தியசாலைக்குள் கும்பல் மோதலில் ஈடுபட அங்கு ஏற்பட்ட பதற்றத்தையடுத்து
சாவகச்சேரி பொலிஸார் அழைக்கப்பட்டனர். அதற்கு முன்னர் தாக்குதல் நமத்திய கும்பல்
அங்கிருந்து தப்பித்தது.