ஜோதிடம்

இன்றைய இராசி பலன் (12.04.2019)

மேஷம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். பூர்வீக சொத்துப் பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட் களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தைரியம் கூடும் நாள்.

ரிஷபம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். விரும்பிய பொருட்களைவாங்கி மகிழ்வீர்கள். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.

மிதுனம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். மற்றவர்கள் பிரச்னையில் தலையிடுவதால் வீண் பழிச் சொல் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் வெளிப்படையாக பேசுவது கூடாது என்பதை உணர்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ளாதீர்கள். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.

கடகம்: குடும்ப ரகசியங்களை வெளியிட வேண்டாம். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் அலைக்கழிக்கப்படுவீர்கள். போராடி வெல்லும் நாள்.

சிம்மம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். பழைய சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் பாராட்டப்படுவீர்கள். புகழ், கௌர
வம் கூடும் நாள்.

கன்னி: சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

துலாம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் உங்கள் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு வரும். புதிய பாதை தெரியும் நாள்.

விருச்சிகம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். சந்தேகப்புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் முக்கிய முடிவுகளை தவிர்ப்பது நல்லது. உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். சகிப்புத் தன்மையால் சங்கடங்கள் தீரும் நாள்.

தனுசு: உங்களின் பலம் பலவீனத்தை உணருவீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தாயாரின் உடல் நிலை
சீராகும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

மகரம்: சின்ன சின்ன சந்தர்ப்பங்களையும், வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். உறவினர், நண்பர்களால் அனுகூலம் உண்டு. எதிர்பாராத சந்திப்பு நிகழும். பழைய பிரச்னையில் ஒன்று தீரும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். திடீர் யோகம் கிட்டும் நாள்.

கும்பம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். புதிய வர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். கனவு நனவாகும் நாள்.

மீனம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனை தீர்க்க புது வழிப் பிறக்கும். வியாபாரத்தில் புதிய மாற்றங்களை கொண்டு வருவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.