ஜோதிடம்

இந்த 2 ராசிக்காரங்க மட்டும் திருமணம் செய்யக்கூடாது ஏன் தெரியுமா?

ஜோதிடத்தின் படி ஒருசில ராசிக்காரர்கள் ஒன்று சேர்ந்தால், அவர்களது காதல் வாழ்க்கை அல்லது திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்காது என்று கூறுகிறது.

விருச்சிகம் மற்றும் கடகம்

இந்த இரு ராசிக்காரர்களும் ஒன்று சேர்ந்தால், இருவரும் எந்நேரமும் அழுது கொண்டே தான் இருப்பார்கள். இந்த இரண்டு ராசிக்காரர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டால், அந்த வாக்குவாதம் அனல் பறக்கும்.

கன்னி மற்று மிதுனம்

கன்னி மற்றும் மிதுன ராசியில் திருமணம் செய்துக் கொண்டால், பணப்பிரச்சனை தான் ஏற்படும். மிதுனம் அன்பே போதும் என்று நினைக்கும். ஆனால் கன்னி ராசி சேமிப்பு அவசியம் என்பதால் பிரச்சனைகள் அதிகரிக்கும்.இருப்பார்கள்.

தனுசு மற்றும் துலாம்இந்த ராசிக்காரர்கள் எப்படி இருவரும் சமாதானமாகி, தங்களுக்குள் இருக்கும் காதலை வளர்ப்பது என்று சற்றும் யோசிக்கவே மாட்டார்கள். அதனால் இவர்களது வாழ்க்கையைக் கொண்டு செல்லும் விதமே தனியாக இருக்கும். இதனாலேயே சண்டைகள் எப்போதும் வரும்.

மீனம் மற்றும் கும்பம்

மீன ராசிக்காரர்கள் தங்கள் துணையிடமிருந்து பாசத்தையும், அன்பையும் எதிர்பார்ப்பார்கள். ஆனால் கும்ப ராசிக்காரர்களோ, சுதந்திரத்தையும், சிறிது இடைவெளியையும் எதிர்பார்ப்பார்கள்.

மகரம் மற்றும் மிதுனம்

இந்த இரு ராசிக்காரர்களின் சேர்க்கை ஒரு பேரழிவில் முடியும். இந்த இரண்டு ராசிக்காரர்களும் முற்றிலும் எதிர்மாறான கருத்துக்களைக் கொண்டவர்களாக இருப்பார்கள்.

கன்னி மற்றும் மீனம்

இவ்விரு ராசிக்காரர்களுக்கும் இடையே நிறைய மோதல்கள் ஏற்படும். மீன ராசிக்காரர்களின் கனவுகள் மற்றும் கற்பனைகள் அனைத்துமே நிறைவேறாமல் தான் இருக்கும்.

மீனம் மற்றும் சிம்மம்

இந்த இரண்டு ராசிக்காரர்களும் ஒரே வழியில் தொடர்பு கொள்ள மாட்டார்கள் மற்றும் எந்த ஒரு சூழ்நிலையிலும் இவர்கள் இருவரும் புரிந்து கொள்ள மாட்டார்கள்.

தனுசு மற்றும் ரிஷபம்

தனுசு ராசிக்காரர்கள் எப்போதுதும் பரபரப்புடன் இருப்பதுடன் எதையேனும் ஆராய்ந்து கொண்டே இருப்பார்கள். ஆனால் ரிஷப ராசிக்காரர்கள் தனுசு ராசிக்காரர்களுக்கு அப்படியே எதிர்மாறாக இருப்பார்கள்.

மேஷம் மற்றும் கடகம்

இந்த இரண்டு ராசிக்கார்களும் எப்போதும் ஒருவரை ஒருவர் புரிந்து நடந்து கொள்ள மாட்டார்கள். மேஷ ராசிக்காரர்கள் வலிமையான குணம் கொண்டவர்கள் . கடக ராசிக்காரர்கள் சென்சிடிவ்வானவர்கள்.