கிசு கிசு

மனைவியின் தங்கை கர்ப்பம்!! யாழில் கணவன் மீது மனைவி கடும் தாக்குதல்!!

தனது தங்கையைக் கர்ப்பமாக்கியதாக சந்தேகித்து மனைவி மேற்கொண்ட தாக்குதலில் இளம் குடும்பஸ்தர் தலையில் படுகாயமடைந்த நிலையில் யாழில் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் கடந்த ஞாயிறு இடம்பெற்றுள்ளது. தலைச்சுற்று, மற்றும் வாந்தி எடுத்த நிலையில் 20 வயதான தனது தங்கையை இளம் குடும்பப் பெண் யாழில் உள்ள தனியார் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளார். அங்கு தங்கை கர்ப்பமாக உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலையில் வைத்தே கர்ப்பத்திற்கு காரணம் யார் என தங்கையை குறித்த இளம் குடும்ப்ப பெண் தாக்கியுள்ளார். அதன் பின்னர் வைத்தியசாலை ஊழியர்கள் அவரையும் தங்கையையும் அங்கிருந்து அகற்றியுள்ளனர். இச் சம்பவம் நடந்து அடுத்த நாள் குறித்த குடும்பப் பெண்ணின் கணவன் அதே வைத்தியசாலையில் தலையில் காயமடைந்த நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந் நிலையில் கணவனின் தாய் வைத்தியசாலைக்கு வந்து தனது மகனின் காயத்துக்கான விளக்கத்தை கேட்டுள்ளார். இனந்தெரியாதவர்கள் தன்னை தாக்கியதாக மகன் பொய் சொல்லிய போது இதனை பொலிசாரிடம் முறையிட தாயார் முற்பட்ட போதே மனைவி தாக்கியதாக மகனால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே வேளை குறித்த குடும்பஸ்தர் தனது மனைவியின் தங்கையைக் கர்ப்பமாக்கவிலை என்பதுடன் தங்கையைக் காதலிப்பதாக கூறிய இளைஞன் ஒருவனாலேயே யுவதி கர்ப்பமாகியதாக தெரியவருகின்றது.

மனைவியிடம் அடிவாங்கிய குடும்பஸ்தர் தனியார் வங்கி ஒன்றின் பொறுப்புவாய்ந்த அதிகாரி என்பதுடன் கணவனைத் தாக்கிய மனைவியும் அரச ஊழியர் என்பதும் குறிப்பிடத்தக்கது.