ஜோதிடம்

இன்றைய இராசி பலன் (09.04.2019)

மேஷம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். எதிர்பார்த்த காரியங்கள் தடையின்றி முடியும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உறவினர்களின் ஆதரவுக் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். அநாவசியப் பேச்சை தவிர்ப்பது நல்லது. சிலரின் தவறான செயல்களை எண்ணி வருந்துவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் கூடுதல் நேரம் வேலை பார்க்க வேண்டி வரும். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.

மிதுனம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. சிலர் உதவி கேட்டு நச்சரிப்பார்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

கடகம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். மனதிற்கு இதமான செய்தி வரும். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன் உரிமை தருவார்கள். இனிமையான நாள்.

சிம்மம்: எங்குச் சென்றாலும் மதிப்பு, மரியாதைக் கூடும். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசு வார்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் பழையவாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள்.உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

கன்னி: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து தக்க சமயத்தில் உதவிகள் கிடைக்கும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

துலாம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். கணுக்கால் வலிக்கும். சில விஷ யங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களால் பிரச்னைகள் வரும். உத்யோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும். ரகசியங்களை காக்க வேண்டிய நாள்.

விருச்சிகம்: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்கள். கல் யாணப்பேச்சு வார்த்தை வெற்றியடையும். தாயாரின் உடல்நிலை சீராகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். தன்னம் பிக்கை துளிர்விடும் நாள்.

தனுசு: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வீர்கள். விருந்தினர்களின் வருகை யால் வீடு களைக் கட்டும். உங்களால் மற்றவர்கள் ஆதாய மடைவார்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள்கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.

மகரம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். எளிதில்செரிமானமாகக் கூடிய உணவுகளை உட்கொள்ளுங்கள்யோகா, தியானத்தில் மனம் லயிக்கும்.வியாபாரத்தில்சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.

கும்பம்: பழைய நல்ல சம்பவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். தாய் வழி உறவினர்களால் அலைச் சல் ஏற்படும். பணப் பற்றாக் குறையை சாமர்த்தியமாக சமாளிப் பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். எதிர் பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

மீனம்: புதிய முயற்சிகள் வெற்றியடையும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பிரபலங்களை சரியாகப் பயன் படுத்திக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம்உண்டு. வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து லாபம் சம்பாதிப்பீர்கள். உத்யோ கத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப் படும். தைரியம் கூடும் நாள்.