Vampan memes

மாணவிகளின் ஜங்கிக்குள் கை வைத்த யாழ் பல்கலைக்கழக மாணவக் காவாலிகள்!! பலரும் கடும் கண்டனம்!!

யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீடத்தின் புதுமுக மாணவர்கள் வரவேற்பு நிகழ்வில் புதுமுக மாணவிகள் சிலர் மீது பாலியல் ரீதியான சீண்டல்கள் மூத்த மாணவர்கள் சிலரால் மேற்கொள்ளப்பட்டதாக செய்யப்பட்டிருக்கும் முறைப்பாடுகள் அதிர்ச்சியளிக்கின்றன என்று தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அண பொதுச் செயலாளரும் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் இன்று அனுப்பிவைத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சபா.குகதாஸ்,
முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்,
தமிழீழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணி பொதுச் செயலாளர்

இல.02,
செட்டித்தெரு ஒழுங்கை,
நல்லூர்,
யாழ்ப்பாணம்.

யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு நேற்று முந்தினம் சனிக்கிழமை (06.04.2019) நடைபெற்ற வேளையில் புதிய மாணவிகள் சிலர் மீது பாலியல் ரீதியான சீண்டல்கள் மூத்த மாணவர்கள் சிலரால் மேற்கொள்ளப்பட்டதாக செய்யப்பட்டிருக்கும் முறைப்பாடுகள் அதிர்ச்சியளிக்கின்றன.

இந்த கீழ்த்தரமான நடவடிக்கைகளை காணொலியில் பதிவுசெய்ய முற்பட்ட மாணவியொருவர் தாக்கப்பட்டதாகவும் புகார் செய்யப்பட்டிருப்பது பல்கலைக்கழகத்தின் காடைத்தனம் அரசோச்சி கொண்டிருக்கிறதா என்ற கேள்வியை எழுப்பி நிற்கின்றது.

மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளுக்கு முற்றிலும் எதிரானதும் எமது தமிழ் சமூகத்தின் பண்பாட்டு விழுமியங்களை சவாலுக்கு உட்படுத்தப்படுவதுமான குறித்த சம்பவங்களை தமிழ் இனத்தின் மீது உண்மையான அக்கறைகொண்ட எவரும் கட்டாயம் கண்டித்தே ஆகவேண்டும்.

இந்த விவகாரத்தில் பல்கலைக்கழக நிர்வாகம் கடுமையான நடவடிக்கையை உடனடியாகவே எடுத்து இனிமேல் இத்தகைய பாலியல் வக்கிரம் பல்கலைக்கழக வளாகத்துள் தலைகாட்ட முடியாது என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

கடந்தசில வருடங்களாக பகிடிவதை என்ற பெயரில் நடாத்தப்பட்டு வந்திருக்கும் காட்டுமிராண்டித் தனமான பல நடவடிக்கைகள் எமது கவனத்தை ஈர்த்திருந்த போதிலும் தமிழ்த்தேசியத்துக்கு பக்கபலமாக யாழ்ப்பாண பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் நீண்டகாலமாக செயற்பட்டு வந்திருக்கும் வரலாற்றுப் பின்னணியில் பல்கலைக்கழக மட்டத்திலேயே இந்தப் பிரச்சினைக்கு சுமூகமான முடிவு காணப்படுமென நாம் எதிர்பார்த்திருந்தோம். ஆனால் இப்பொழுது நிலைமை கட்டுக்கடங்காமல் எங்கோ போய்விட்டது என்பது தெட்டத்தெளிவாகத் தெரிகின்றது.

இனிமேலும் இது யாழ் பல்கலைக்கழகத்தின் பிரச்சினையாக மட்டும் கருதப்பட முடியாது. விடுதலை கோரி நிற்கும் எமது இனத்தின் மத்தியில் பல்கலைக்கழக மாணவர்கள் என்ற முகவரியுடன் ஒருசிலர் கட்டாக்காலிகள் போல காடைத்தனத்தில் ஈடுபடுவதை எமது இனம் குறிப்பாக யாழ்ப்பாண சமூகம் இனிமேலும் கைகட்டி பார்த்திருக்க மாட்டாது என்பதை அறுதியிட்டு உறுதியுடன் கூறிநிற்க எமது இளைஞர் அணி விரும்புகின்றது.

சில வருடங்களுக்கு முன்னர் இருந்து யாழ். பல்கலைக்கழகத்தின் ஒருசில ஆண் விரிவுரையாளர்கள் தொடர்பில் தெரிவிக்கப்பட்ட பாலியல் ரீதியான குற்றச்சாட்டுக்களை நாங்கள் இன்னமும் மறந்துவிடவில்லை. இப்போதும் கூட இந்த விவகாரம் ஒருசில வேளைகளில் தலைதூக்கி வந்திருப்பதும் எமக்குத் தெரியும்.

இச்சந்தர்ப்பத்தில் பல்வேறு துன்பங்களுக்கு நடுவில் மிகவும் கஷ்டப்பட்டு தமது பிள்ளைகளுக்கு பல்கலைக்கழக கல்வியை பெருமையுடன் வழங்கும் அவர்களின் பெற்றோர்கள் உளவியல் ரீதியாகச் சந்தித்துக்கொண்டிருக்கும் பாதிப்புக்களையும் இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்தே ஆகவேண்டும்.

ஒட்டுமொத்தமாக சொல்வதானால் இந்த பிரச்சினை தொடர்பில் தேவைப்படும் சட்டரீதியான சகல நடவடிக்கைகளும் உடனடியாக எடுக்கப்பட வேண்டும். தவறினால் இதற்கான நிரந்தரத் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்காக எமது இளைஞர் அணி ஜனநாயக ரீதயாக தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.