கணவனுக்குத் தெரியாமல் காதலனுடன், செக்ஸ் வைப்பது தப்பில்லை ! சமந்தா
சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் என் கதாபாத்திரம் ரசிகர்களின் வெறுப்பைச் சம்பாதிக்கும் கதாபாத்திரமாக இருந்தது என்று நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.
ஆரண்யகாண்டம் படத்திற்குப் பிறகு எட்டு ஆண்டுகள் கழித்து தியாகராஜன் குமாரராஜாவின் இயக்கத்தில் வெளிவந்துள்ள இரண்டாவது படம் சூப்பர் டீலக்ஸ். இந்த படத்தில் விஜய் சேதுபதி ஷில்பா என்ற பெயரில் திருநங்கையாக நடித்திருக்கிறார். மேலும் சமந்தா, ஃபகத் ஃபாசில், மிஷ்கின் உள்ளிட்ட நடிகர்களும் படத்தில் நடித்துள்ளனர். இந்த படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வந்திருக்கின்றன.
இந்நிலையில் இப்படத்தில் நடித்துள்ள சமந்தா சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், ‘சூப்பர் டீலக்ஸ் படத்தில், ‘வேம்பு’ கதாபாத்திரம் கிடைத்ததில் மகிழ்ச்சி. ஆனால் அது ரசிகர்களின் வெறுப்பைச் சம்பாதிக்கும் கதாபாத்திரமாக இருந்தது. இருந்தாலும் வெறுத்தவர்களே முடிவில் அவளுக்காக வருத்தப்படுவார்கள். இது போன்ற கதாபாத்திரத்தில் நடிக்க, அதிக தன்னம்பிக்கை வேண்டும்’ என்றார்.
‘வேம்பு கதாபாத்திரம் தன் கணவனுக்குத் தெரியாமல் முன்னாள் காதலனுடன், உறவு வைத்துக்கொள்கிறாள். அதனால், அவள் நடத்தை சரியில்லாதவள் என்று அர்த்த மல்ல. ஆனால் கணவன் சம்மதத்துடன் இன்னொருவன் அவளை நெருங்கி வருவதை அவள் ஏற்கவில்லை. அதனால் அது ஒரு அழுத்தமான கதாபாத்திரமாக அமைந்தது’ என்று கூறியுள்ளார்.
முன்னதாக சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் திருநங்கைகளைக் கொச்சைப்படுத்திக் காண்பித்துள்ளதாகக் கூறி விஜய் சேதுபதியைக் கைது செய்ய வேண்டும் என்று திருநங்கைகள் பலர் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.