புதினங்களின் சங்கமம்

திருமண சேலைக்குள் ‘ஐஸ்‘ வைத்த நபருக்கு நடந்த கதி!!

இலங்கை சென்ற நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவின் தமிழகத்தை சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் சட்டவிரோதமான முறையில் போதைப்பொருளை இலங்கைக்குள் கொண்டு செல்ல முற்பட்ட நபரே சுங்கஅதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

திருமண சேலைக்குள் மறைத்து கொண்டுவரப்பட்ட 2 மில்லியன் ரூபா பெறுமதியான 200 கிராம் ஐஸ் பேதைப்பொருளுடன் இந்திய பிரஜை ஒருவரையே சுங்க அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

சென்னையை சேர்ந்த நபர் ஒருவர் 2 மில்லியன் ரூபா பெறுமதியான 200 கிராம் ஜஸ் போதைப்பொருளுடன் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை சென்றடைந்தார்.

இதன் போது குறித்த நபரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டு பயணபொதியை சோதனையிட்டபோது 45 வயதான நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.