இந்தியச் செய்திகள்

சரவண பவன் முதலாளிக்கு ஆயுள் தண்டனை உறுதி!! அடுத்தவன் மனைவிக்கு ஆசைப்பட்டதால் வந்த வினை!!

சரவண பவன் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை உறுதி- வீடியோ சென்னை: மாநிறம்தான்.. கலையான முகம்.. பெரிய அளவில் கவர்ச்சிகரமான கண்கள்.. லட்சணமான தோற்றம்..

இவர்தான் ஜீவஜோதி! அன்றைய தினங்களில் சினிமாக்களையும், சீரியல்களையும் தூக்கி சாப்பிடும் அளவுக்கு பத்திரிகைகளில் முக்கிய இடத்தையும் பிடித்தார் ஜீவஜோதி! ஜீவஜோதியின் தந்தை, சரவணபவன் ஹோட்டலில் மேனேஜராக வேலை பார்த்தவர். இப்படித்தான் ஜீவஜோதியின் குடும்பத்தில் சரவண பவன் ஓனர் ராஜகோபாலுக்கும் தொடர்பு ஏற்பட்டது.

ஜீவஜோதியின் அழகில் மயங்கி விழுந்தார் ராஜகோபால்! ஐடி ஊழியர் குரல் நாடாளுமன்றத்தில் எதிரொலிக்க இவருக்கு வாக்களியுங்கள்.. நாம் தமிழர் கட்சி கோரிக்கை காதலித்தார் காதலித்தார் ஏதோ ஒன்றில் ஜீவஜோதியால் ஈர்க்கப்பட்டு விட்டார்! அதற்காகவே அந்த குடும்பத்திற்கு பல உதவிகளை செய்தார் . ஆனால், ஜீவஜோதியோ பிரின்ஸ் சாந்தகுமார் என்பவரை காதலித்தார். திருமணமும் செய்துகொண்டார். இது அண்ணாச்சிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

ஆசைப்பட்டார் ஆசைப்பட்டார்

ஏற்கனவே 2 மனைவிகளை உடைய அண்ணாச்சி, 3-வதாக ஜீவஜோதியை முழுசாக அடைய முயற்சித்தார். இதற்காக கணவர் சாந்தகுமாரை அழைத்து மிரட்டியுள்ளார். ஜீவஜோதியை மூன்றாவது திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும், சாந்தகுமாரை விலகும்படியும் சொன்னார். கொலை செய்யும் எண்ணம் கொலை செய்யும் எண்ணம் ஆனால் காதலித்த கணவன் சாந்தகுமாரோ இதற்கெல்லாம் மசியவில்லை. மனைவியை விட்டுத்தர முடியாது என்று துணிந்து அண்ணாச்சி முகத்தை பார்த்து சொன்னார். இதுதான் கொலை செய்யவும் அண்ணாச்சியை தூண்டியது.

கொடைக்கானல்

கடந்த 2001ம் ஆண்டு அக்டோபர் மாதம் 26ம் தேதி சாந்தகுமார் கடத்தப்பட்டார். புருஷனை காணவில்லை என்று பதறிபோய் ஜீவஜோதி போலீசில் புகார் தந்தார். போலீசும் தீவிரமாக தேடியலைந்தார்கள். கடைசியில், 5 நாட்களுக்கு பிறகு கொடைக்கானல் மலை அடிவாரத்தில் சாந்தகுமாரின் உடலை கண்டெடுத்தனர். சித்ரவதைகள் சித்ரவதைகள் விசாரணை ஆரம்பமானது.. அப்போது இந்த விவகாரத்தில் ராஜகோபால் சம்பந்தப்பட்டிருக்க மாட்டார் என்றே அனைத்து தரப்பிலும் நம்பப்பட்டது. ஆனால் சென்னையில் இருந்து கொடைக்கானலுக்கு காரில் கடத்தி செல்ல ஐடியா தந்ததே ராஜகோபால்தான் என தெரியவந்தது. காரில் செல்லும்போதே சாந்தகுமார் கழுத்து நெறிக்கப்பட்டது.. கொடைக்கானல் மலை உச்சிக்கு செல்வதற்குள் பல சித்ரவதைகள் வந்து போயின.. அப்போதே பாதி உயிர் போயிற்று.. இறுதியாக உச்சியில் இருந்து தூக்கி வீசப்பட்டார் சாந்தகுமார்.

ஆயுள் கடைசியில் தமிழகம் முழுக்க நாறிப் போனார்.

ஓட்டல் வைத்து ஊருக்கே சோறு போட்ட முதலாளி சிறைக்கு சென்று களி தின்றார். ராஜகோபால் மட்டும் அன்று கொல்ல முயற்சிக்காமல் இருந்திருந்தால் இந்த கன்றாவி பின்னணிகள் எல்லாம் கடைசிவரை வெளியவே தெரிந்திருக்காது. ஒட்டுமொத்த பெயரும் கெட்டு போன ராஜகோபால் தன் இறுதி மூச்சுவரை சிறையிலேயே கழிக்கும் நிலைமையும் இன்று ஏற்பட்டுவிட்டது!