புதினங்களின் சங்கமம்

க.பொ.த பெறுபேறு: யாழ்.வேம்படி மகளிர் கல்லூரி மாணவிகள் சாதனை!!

நேற்று(28)இரவு வெளியாகியுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ்ப்பாணத்தின் பிரபல கல்லூரிகளான வேம்படி மகளிர் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆகிய பாடசாலைகள் முன்னிலையிலுள்ளன.இதன்படி, கடந்த-2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இடம்பெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரியிலிருந்து தோற்றிய மாணவிகளில் 50 பேர் 9 ஏ தர சித்திகளையும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலிருந்து பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 35 பேர் 9 ஏ தர சித்திகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.